.
என் பழைய கிராமத்து வீடு 09-11-25
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&(கவியோகி
வேதம்)-
வாசற் புறத்தில்,- செண்பகப் பூக்கள்
வாவா என்றே
நம்மை அழைக்கும்;
ஆசை கொண்டே ரோஜாப் பூக்கள்
அன்புடன் நெஞ்சைக்
கவர்ந்து கொள்ளும் ;
பகலும் இரவும் பறவைக் கணங்கள்
பலவித
ராகத்தில் கவிதை நெய்யும்;
குகைபோல் தெரியும்என் தாத்தா இல்லம்
கிராமப் பகுதியின் கொடை
வசந்தம்.
எத்தனை அறைகள் !எத்தனை ஜன்னல் !
.. எல்லாம் பார்த்தால் அதிசயப் பின்னல் !
. பித்தனைப் போலே குருவியை, கிளியை
.. பிரமிப்பாய்ப் பார்த்துக் கொண்டி ருப்பேன் .
கொல்லைப் புறத்தின் கதவு திறந்து
கூர்மையாய்
ஆற்றின் ஓசையைக் கேட்பேன் ;
.. எல்லையில் லாத இன்பம் கொள்வேன் ;
யாரும் அழைத்தால் கோபம் கொள்வேன்.
. பார்க்கும் போதே நாரை ஒன்று
.. பச்சென்று மீனை அலகில்
தூக்கும் .
. யார்க்கும் அஞ்சா எருமை ஒன்று
எங்கிருந் தோவந்து நீரைத் துளைக்கும். .
. .
காய்ந்த மணலிலும் குழிகள் தோண்டி
கற்களைப்
படிபோல் அடுக்கி
அடுக்கி
பாய்ந்தே வருகிற தெளிந்த நீரைப்
பங்கு
போடுவர் கிராமச் சிறுமியர்..
என்னே சொல்வேன் அன்றைய அழகை!
இன்றோ வீடே சற்றே சிதிலம்!—ஓ!
முன்னாள் நினைவெலாம் ஒதுக்கி
விட்டேன் ;அதை
முதியோர் இல்லமாய் மாற்றி மகிழ்ந்தேன் !(கவியோகி வேதம் )-
--