My new Poem
**************
கற்பனைத் தேரேறி கவலையை மற;-
&&&&&&&&&&&&&&&&&&(கவியோகி
வேதம்)26-04-20
கற்பனைத் தேரில்நீ பறந்து சென்றால்
கவலையும் உன்னைவிட் டோடி
டாதோ?
அற்பமாம் வேதனை முட்கள் எல்லாம்
அந்தஓர் தேர்மூலம் மாய்ந்தி
டாதோ?
.
விண்ணில்உன் கற்பனை பாய்ந்து
நின்றால்
மேவிடும் காட்சிகள் இன்பமடா!-மனக்
கண்ணிலே தென்படும் அமுதக்
குடம்
கவலை- அசுரரை மாய்த்துவிடும்!
வளைந்து வானிலே பாயும்அந்
நாரைகள்
மாயையடா இந்த உலகம்
என்னும்!
உளையும்உன் எண்ணமாம் குப்பை
எல்லாம்
ஒன்றாக விண்ணிலே தேய்ந்து
விடும்!!