கண்போல் பக்தரைக் காக்கும் காளிகாம்பாள்
பாரதியார் தினம்வணங்கிச் சிலிர்த்த தேவி!
.. பாடல்களை அவர்நாவில் வழங்கித் தேனின்
சாரம்போல் தான்இருந்த அன்னை! பக்தர்
...சன்னதியில் நெகிழ்ந்துநின்றால் தானும் சூஷ்ம’ப்
பாரமுடை மனம்கொண்டே கனியும் அன்னை!
....பலவரங்கள் தரும்அம்மா! மலடி என்ற
சாரமில்லாத் திட்டுகளால் நொந்த பெண்கள்
...தாய்மைபெற்றார்! அருள்வாளே “காளி” காம்பாள்!
கடற்கரையில் முதன்முதலாய்த் தோற்றம் கொண்டாள்!
...கனிந் (து)இங்கே தம்புசெட்டித் தெருவில் தானே
இடம்பெயர, விஸ்வகர்மாக் குலத்தோர், “தாயே!”
....எனப்போற்ற, அவராலே கோவில் கொண்டாள்!
படைவாளைச் சத்ரபதி “சிவாஜி”, முன்னால்
... பணிந்துவைத்தார்! “இவள்”போரில் வெற்றி தந்தாள்!
அடையாளம்,(?)- இவண்‘சிலை’யாய்க் காண்பீர்! பாட்டால்
... ஆர்ப்பரிப்பீர்! அருள்பெறுவீர்! உணர்ச்சி கொள்வீர்!
சென்னியம்மன் பேரு(ம்)இவள் கொண்டாள்! லக்ஷ்மி
...சேர்ந்தகண்ணும், வலது-‘சரஸ் வதி’யும் கொண்டாள்!
உன்னிவந்த கலைஞர்க்கே பொருளும், கல்வி
...ஒப்பில்லா நலம்யாவும் தந்த தாலே
‘சென்னியம்மா!’- எனப்பலரும் இவளைப் போற்ற
... ‘சென்னை’இதே எனநகர்ப்பேர் மாற லாச்சே!
கன்னியர்கள் திருமணம்தான் நடக்க வேண்டிக்
...கால்நடையாய்ச் சுற்றிவந்தால் ‘அது’ந டக்கும்!
காலையிலே வாருங்கள்! நாத்தி கர்கள்
..கண்பனிக்க வேண்டுவரே! சிரித்தே அம்மா
பாலையுமே தான்கொடுத்துப் பலதும் ஈவாள்!
.. பதவிகளை இவளருளால் பெற்ற பேர்கள்
மாலைகொண்டு நெகிழ்ந்(து)அழுவார்! பார்த்துள் ளேனே!
.. மாயை,மன மாச்சர்யம் இவள்முன் நில்லா!
சூலம்தான் எதற்காகக் கையில் கொண்டாள்?
..சூறைபோல் ‘மனம்’பெயர்க்க!.-. தெளிவீர் நீரே!